மட்டக்களப்பு கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர்
தின நிகழ்வு இம்முறை “ஆசிரியர்களை வலுவூட்டி நிலைபேறான சமூகத்தை
கட்டி எழுப்புவோம் “ எனும் தொனிப்பொருளில் பாடசாலை
மாணவி செல்வி .ஜீ. டிலக் ஷியா தலைமையில் 12.10.2015 மாலை 03.30 மணியளவில் பாடசாலை
மண்டபத்தில் இடம்பெற்றது .
கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின்
ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது .
இடம்பெற்ற ஆசிரியர் தின
நிகழ்வில் மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் .
அதனை தொடர்ந்து மங்கள
விளக்கேற்றலுடன் ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம்
பாடப்பட்டது . அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது .
விழிப்புலனற்ற மாணவர்களை கல்வியிலும் சமூக மட்டத்திலும் மற்றவர்களை போன்று முன்னிலையில் கொண்டு செல்லும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம் .
குருகுலசிங்கம் ,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன் , கல்லடி தரிசனம்
விழிப்புலனற்றோர் பாடசாலை தலைவர் எம்
.தயானந்தன் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்