மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த மூன்று தினங்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரத போராட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நிறைவுக்கு வந்தது.
அரச நியமனம் வழங்கக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் மட்டக்களப்பு மாவட்ட பட்டததாரிகள் ஒன்றியத்தினால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
2012மார்ச் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம்பெற்ற தமக்கு இதுவரையில் அரச நியமனங்களுக்குள் உள்வாங்கப்படாதததை கண்டித்தும் நியமனம் வழங்ககோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை காலை அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பட்டதாரிகள் உண்ணாவிரதம் உள்ள பகுதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாசீர் நசீர் அகமட்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசிலும் சில நிர்வாக சிக்கல்கள் உள்ளதன் காரணமாக அவற்றினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறும் முதலமைச்சரினால் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனவே எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் தமக்கு ஒரு காலக்கெடுவை தருமாறும் அதற்குள் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாகவும் முதலமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் பொன்.லதாகரன்,
முதலமைச்சரின் கோரிக்கையினை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும்.எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதலமைச்சரை வந்து சந்திப்பதற்கான அனுமதியை தரவேண்டும் எனவும்.அன்றை தினம் தங்களுக்கான உறுதிமொழிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணசபையினை முற்றுகையிட்டு போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் தற்போது தமது உண்ணாவிரத போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடுவதாகவுமு; தெரிவித்தார்.