மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் குறளை சாரண ஆசிரியர்கள் மற்றும் ஆண்,பெண் சாரண ஆசிரிய தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு தெரேசா கல்லூரியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் ஈ.பி.ஆனந்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய சாரணர் சங்கத்தின் பயிற்சிக்குழு தலைவர்களான எஸ்.சௌரராஜன்,செல்வி க.பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் சாரணர்களை உருவாக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு சின்னஞ்சூட்டப்பட்டது.
இதன்போது 21குறளை சாரணர்களும் 27சாரண தலைவர்களுக்குமான சின்னஞ்சூட்டப்பட்டு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டதாக ஊடக இணைப்புக்கான மாவட்ட சாரண உதவி ஆணையாளர் க.புட்கரன் தெரிவித்தார்.
ஆறாவது தொகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுவதாகவும் தொடர்ச்சியாக இந்த பணி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.