புலமைப் பரிசில்பரீட்சை முடிவுகளில் மட்டக்களப்பு, கரவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சுதாகர் அஸ்வினி; 189 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 3ம் இடத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பின்தங்கிய கிராமத்துப் பாடசாலையில் மேலும் 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்துள்ளனர்.
கரவெட்டிப் பிரதேசத்தில் வாழும் மக்கள் கடந்த கால யுத்ததம், இடப்பெயர்வு, காட்டு யானைகளால் உயிராபத்து, வறட்சி, பௌதீக வளப் பற்றாக்குறை வீதி, போக்குனுவரத்து சீரின்மை உள்ளிட்ட இயற்கை செயற்கை இடர்களால் அதிகம் பாதிப்புறுபவர்கள்.
அத்தகைய கஷ்டமான சூழலிலும் பாடசாலைக் கல்வியோடு மாத்திரம் சுயமுயற்சியனால் கற்று சித்தியடைந்ததோடு இந்த மாணவி மாவட்டத்திலும் சாதனை படைத்துள்ளார்.
இது பெருமைகுரிய சாதனையாகும். ஆற்றலும், ஆர்வமும், அக்கறையுமுள்ளளோருக்கு புறச்சூழல் ஒரு தடையாக இருக்காது என்பதற்கு இந்த மாணவியும் அந்தக் கிராமத்தில் சித்திடைந்த ஏனைய மாணவர்களும் ஒரு வாழும் முன்னுதாரணமாகும்.