இதற்கமைய, நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நகரில் பொலிஸசார் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கும் இச்செயலமர்வுகள் நடாத்தப்பட்டன.
ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர்களான கே.அமில ராஜபக்ஸ, எஸ்.தனுஜ்தனூஸ் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹக்மன பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2012ம் ஆண்டு மின்சார தாக்குதல்களினால் ஏற்பட்ட மரணங்கள் 180ஆகும். இவை 2013ல் 76ஆகவும் 2014ல் 73ஆகவும் இவ்வாண்டு 52 ஆகவும் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



