மட்டக்களப்பு நகரில் 12 வருடங்களுக்கு பின்னர் புலமைப்பரிசில் சித்தியை பெற்றுக்கொண்ட பாடசாலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றில் பன்னிரண்டு வருடங்களுக்கு பின்னர் மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் வித்தியாலயத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு பின்னர் அன்ரனிராஜ் நிதுர்சிக்கா என்ற மாணவி 160புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.

பாடசாலையின் அதிபராக 2013ஆம் ஆண்டு திருமதி மாலதி பேரின்பநாதன் கடமையேற்றதை தொடர்ந்து பாடசாலையின் கல்விச்செயற்பாடுகள் முன்னேற்றப்பாதையை நோக்கிச்செல்வதை இது காட்டுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய கற்பித்தல் செயற்பாடுகளை கவிதா முரளிதாஸ் ஆசிரியர் மேற்கொண்டுவருகின்றார்.

இந்த பாடசாலையில் மூன்று மாணவர்கள் நூறுக்கும் மேல் வெட்டுப்புள்ளிகளைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.