
நல்லாசி வேண்டிய பூஜை வழிபாடும்இ வரவேற்பு விழாவும் இறுவெட்டு வெளியீடும்
இன்று(08) அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளதாக ஆலயத்தலைவர் கீ.கமலமோகனதாசன் தெரிவித்தார்.
இன்று பிற்கபல் 5மணியளவில் அம்பாரை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை வரவேற்கும் நிகழ்வானது பிரதேசத்தின் முன்வாயிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை சென்றடைந்ததன் பின்னர் ஆலயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோருக்கு நல்லாசி வேண்டிய வழிபாடும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆலய பரிபாலன சபையின் ஒத்துழைப்போடு கோளாவில் மீனவர் சங்க அமைப்புஇ மூத்த பிரஜைகள் அமைப்புஇ துர்க்கா கிராமிய பெண்கள் நல்வாழ்வு மன்றம்இ கோளாவில்-01இ02 மாதர் சங்கம்இ சர்வசக்தி மன்றம் மற்றும் பெண்கள் அரங்கத்தினர் ஆகியோர் ஒன்றினைந்து இவ்வரவேற்பு நிகழ்வினை ஒழுங்கமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரவேற்பு மற்றும் பூஜை வழிபாடுகளின்; பின்னர் இராஜமோகனின் விக்கேஸ்வரருக்கான இசைக்காணிக்கை இறுவெட்டும் வெளியீடு செய்யப்படும் எனவும் இறுவெட்டு வெளியீட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் வெளியீட்டு வைப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றறைய தினம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.