இலங்கையில் இரண்டாவது நீண்ட வாவியினையும் அழகான கடற்பரப்புகளையும் கொண்ட மாவட்டமாக சுற்றுலாப்பயணிகளினால் கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையினை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான பகுதியாக கடற் பகுதி இருந்துவருகின்றது.
அத்துடன் பல சுற்றுலா மையங்களும் சுற்றுலா விடுதிகளும் அதிகளவாக கடற்கரையை அண்டிய பகுதியிலேயே காணப்படுகின்றன.
இதனடிப்படையில் கடற்கரையை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவம் வகையிலான நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையிலான உயர்மட்டக்கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 22ஆம் திகதி தேசிய கரையோர தூய்மைப்படுத்தும் தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
மாவட்ட பிரதம கணக்காளர் நேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமைத்து பொதுமுகாமையாளர் நிமால்,கரையோரம்பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபன், தேசிய கடல்சார் சூழல்பாதுகாப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடல் வலயங்களைக்கொண்ட எட்டு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள்,பொலிஸ் மற்றும் இராணுவ,கடற்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 100மீற்றர் நீளத்தினை கடற்பரப்பு கொண்டுள்ள நிலையில் 50 கிலோமீற்றர் தூரம் உள்ள கடற் கரை பிரதேசம் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்படவுள்ளது.
எட்டு பிரதேச செயலகங்களினையும் 25 பிரிவுகளாக பிரித்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொலிஸ்,இராணுவம்,கடற்படை,பொதுமக்களின் உதவிகளும் பெறப்படவுள்ளது.