கா.பொ.த.சாதாரண தர கணித பாட மாணவர்களுக்கான செயலேடு வழங்கும் நிகழ்வு

(அமிர்தகழி நிருபர் ) 

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு பிரதி கல்வி பணிப்பாளர் சசிந்திர சிவகுமார் ( திட்டமிடல் ) தலைமையில் க .பொ .த . சாதாரண கணித பாட  மாணவர்களுக்கான  கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது .

இக்கையேட்டினை  யாழ் இந்துகல்லுரியின்  1992  ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின்  ருமு அனுசரணையில் சுமார் 1170  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது  .  மட்டக்களப்பு பாடசாலை  மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் இக்கையேட்டினை  இலவசமாக வழங்கி உள்ளனர் .

இக்கையேடுகளின்   முதல் பிரதிகளை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி (அலுவலகம் ) திருமதி . கங்கேஸ்வரன் , கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் . வலயக்கல்வி பணிப்பாளர் ( கல்வி நிருவாகம் )  கோவிந்தராஜ்  வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் கணித பாட  ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் .