(அமிர்தகழி நிருபர்)
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் அனுசரணையில் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா 2015 கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய மட்ட விளையாட்டு விழாவில் இடம்பெற்ற மல்யுத்தப்போட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்கள் பதக்கங்களை பெற்றுள்ளனர் .
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவ அணியினர் ஐந்து பதக்கங்களையும் மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவ அணியினர் மூன்று பதக்கங்களையும் பெற்று மட்டக்களப்புக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் .
12, 13 , 14 ஆகிய திகதிகளில் கொழும்பு அசோகா வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் பங்குபற்றிய மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையினை சேர்ந்த மாணவர்கள் மூன்று வெள்ளி பதக்கங்களையும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர் .
அத்துடன் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்கள் ஒரு வெள்ளி பதக்கத்தினையும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் பெற்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்களை பெற்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு இன்று காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது .
அத்துடன் இடம்பெற்ற தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் ஐந்து பதக்கங்களை பெற்ற மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை தேசிய மட்டத்தில் ஐந்தாவது இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .