கல்லடி உப்போடையில் கிருஸ்ண ஜெயந்தி தின நிகழ்வு

ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அகில இலங்கை கிருஸ்ண பக்தி கழகத்தின் ஏற்பாட்டில் நொச்சிமுனை துளசிமண்டபத்தில் நேற்று முதல் கிருஸ்ண ஜெயந்தி தினமும் ஸ்ரீல பிரபுபாதர் ஜனன தின நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

நேற்று மாலை மண்டபத்தில் விசேட சொற்பொழிவுகள் மற்றும் அபிசேக ஆராதணைகள் நடைபெற்றன.

உல கநன்மைக்காக காலம் தோறும் அவதாரமாக தோன்றி மக்களை நல்வழிப்படுத்தும் தெய்வமாக ஸ்ரீகிருஸ்ண பரமாத்மா விளங்கிவருகின்றார்.

இதன்கீழ் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களை ஆன்மீக ரீதியான சிந்தனையில் திழைக்கவைக்கும் வகையில் அகில இலங்கை கிருஸ்ண பக்தி கழகம் நாடெங்கிலும் இவ்வாறான நிகழ்வினை ஏற்படுத்திவருகின்றது.
இதன் கீழ் நேற்று சனிக்கிழமை ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

இன்று காலை தொடக்கம் சொற்பொழிவு ஆச்சாரியா,கீர்த்தனை,பஜனை என்பன நடைபெற்றுவருகின்றது.