கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களுக்குமான  ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை 'விடியல் ஸ்ரீலங்கா' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல், தகவல் அறியும் சட்டமூலம், அறிக்கையிடலுக்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் ஆகிய தலைப்புகளிலும் விரிவுரைகள் இடம்பெறும்.

நாட்டின் தலை சிறந்த ஊடக பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தவுள்ள இந் நிகழ்வு ஒக்டோபர் மாத நடுப் பகுதியில் மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கிழக்கு மாகாணத்தினை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்கள் hவவி:ஃஃடிவை.டலஃ1முh21தர எனும் இணையத்தள முகவரிக்கு விஜயம் செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்.  

இந்த ஒன்றுகூடல் தொடர்பான மேலதிக விபரங்களை 0768563004 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.