தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை பகுதியில் கையெழுத்துப்பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் த.சுரேஸ் மற்றும் முன்னியின் முக்கிஸ்தர்களான கு.குகதாஸ்,அண்ணாத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் கையெழுத்தினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த போராட்டம் முன்னெக்கப்பட்டுவருகின்றது.
இலங்கையில் நடைபெற்றதாக கருதப்படும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை உள்ளூர் பொறிமுறையை நிராகரிப்பதுடன் சர்வதேச விசாரணையை நடாத்தவேண்டுடியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று பிற்பகல் கிரான் பொதுச்சந்தை பகுதியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.