குளவி கொட்டி மாணவி உயிரிழப்பு –சவுக்கடியில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கற்கும் மாணவியொருவர் குழவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறாவூர் சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த தவபாலன் வினோஜினி (வயது 16) என்ற மாணவியே உயிரிழந்தவராகும்.

புதன்கிழமை பாட்சாலை விட்டு வீடு செல்லும் வழியில் அவரது கிராமத்துக்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து கருங்குழவிகள் கொட்டியுள்ளன.

காயங்களுக்குள்ளாகி மயக்கமடைந்த மாணவி உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை காலை மரணத்தைத் தழுவியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் பிரதேச பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு;ள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.