அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட வேப்பை மரங்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை வேப்பை மரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வெட்டப்பட்டு கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை வேப்பை மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வேப்பை மர குற்றிகளும் அதனைக்கொண்டு சென்ற டரக்டர் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 06ஆம் திகதி வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.