தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியுள்ள சமஸ்டி அதிகாரத்தை பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் வழங்காது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடகமே தேர்தல் விஞ்ஞாபனம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்தேர்தல் அலுவலகம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த அலுவலகத்தினை திறந்துவைத்தார்.
அலுவலக திறப்பினை தொடர்ந்து அங்கு தேர்தல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது பல்வேறு தரப்பினரும் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் பெருமளவான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய வேட்பாளர்,
நான் தமிழ் தேசியத்திற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்கோ நான் ஒருபோதும் எதிரானவன் அல்ல.ஆனால் இவர்களினால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யமுடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாடாக கருதுகின்றனர்.அதனால் அவர்களை எதனைக்கூறியும் தங்கள் பின்னால் இழுத்துச்செல்லலாம் என நினைக்கின்றனர்.
கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசின் கால்களில் வீழ்ந்து இரண்டு அமைச்சுகளை பிச்சையாக பெற்றுக்கொண்டுள்ளது.இவர்கள் முஸ்லிம் காங்கிரசின் கால்களை வீழ்ந்ததை விட ஒரு தேசிய கட்சியின் காலில் வீழ்ந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை செய்திருக்கலாம்.
இன்று இவர்கள் அரசியல் வியாபாரம் நடாத்துகின்றனர்.ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தினைக்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விற்கின்றனர்.இதுதான் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் சேவையாகும்.இதுதான் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு செய்யும் சேவையாகும்.
நான் ஒருபோதும் இங்கு அரசியல்வியாபாரம் செய்யவில்லை.என்னால் முடிந்த சேவைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்துள்ளேன் என்றார்.