பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்கும் சுதந்திர முன்னணி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்தால், அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும்,  சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய பொது தேர்தலில் பிள்ளையான் தோல்வியுற்றால் தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதென தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்ட பிள்ளையான், பின்னர்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பதவி வகித்தார்.