தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித அபிவிருத்தியையும் செய்யமுடியாது என்பதுடன் அவர்களினால் உரிமையினையும் பெற்றுக்கொடுக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான கிருஸ்ணபிள்ளை சிவனேசன்(வெள்ளையன்) தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் விட்டால் எமது சமூகம் இந்த மாவட்டத்தில் அழியும் நிலையே ஏற்படும்.இந்த நிலை தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.
எமது உரிமைப்போராட்டம் இன்று இல்லாமல்போய்விட்டது.அதற்காக நாங்கள் உரிமையை இழந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை.நாங்கள் எதிர்ப்பு அரசியலைச்செய்துகொண்டு உரிமையினைப்பெறமுடியாது.
நாங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் பல தியாகங்களையும் இழப்புக்களையும் சந்தித்த சமூகம் தொடர்ந்து இழப்புகளை சந்திக்கமுடியாது.எமது மக்களை மேம்படுத்தவேண்டிய தேவையிருக்கின்றது.
நாங்கள் கோவனத்துடன் நின்றுகொண்டு கோபுரம் தொடர்பில் பேசமுடியாது.நாங்கள் அதற்கு அண்மித்து செல்லவேண்டுமானால் நாங்கள் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.
இந்த நாட்டில் நாங்கள் பேரினவாத கட்சிகளை ஒதுக்கிவிட்டு எமது உரிமைகளைப்பெறமுடியாது.அதேபோன்று தனித்துநின்று செயற்படுவதன் மூலமும் எதனையும் பெறமுடியாது.அதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து இந்த தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்.
நாங்கள் இன்னும் இன்னும் பார்வையாளர்களாகவும் உணர்வுக்கு அடிமைப்படுபவர்களாகவும் இருக்கமுடியாது.எங்கள் சமூகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.