கிழக்கு பல்கலைகலைக்கழகத்தில் சதங்கை அணி விழா

மனித ஆளுமைகளை உருவாக்கும் செயல் தன்மை கொண்டதாக சமூகங்களில் பாரம்பரிய கூத்துக்கள் செயற்படுகின்றன.


ஓவ்வொருசமூகங்களும் தங்கள் அறிவுமுறைகளை இத்தகைய கூத்துக்கள்,நிகழ்த்துதல்கள் மூலமேபரிமாறிவருகின்றது. இத்தகைய சமூக அரங்கவெளிகள் ஆய்வுக்கும் கற்றலுக்கு முரிய வெளிகளாக உள்ளன.

இத்தகைய தன்மைகொண்ட கூத்துக்களை நிகழ்த்துதல்களை செய்துகற்கும் செயற்பாட்டிற்குரிய கற்கையாக உள்ளட்க்கப்பட்டு நுண்கலைத்துறையில் பல நிகழ்த்துதல்கள். கொண்டாட்டங்கள் நிகழ்தப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை தம்பிமுத்துஅண்ணாவியார் தலைமையில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் அலங்கார ரூபன் கூத்தின் சதங்கை அணிவிழா நுண்கலைத்துறை விரிவுரையாளர்,மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

கூத்துக்கலைஞர்கள் கூத்தில் ஏடு படிப்பவர்கள் கூத்தில் ஆவலர்கள் அனைவரும் நிகழ்த்து கைதளத்தில் நிகழ்த்துதலை நிகழத்தியவண்ணம் சிறப்பித்தனர்.

சதங்கை அணிவழாவின் தலைமையை துறைத்தலைவர் கலாநிதி வ. இன்பமோகன் அவர்கள் ஏற்றிருந்தார். தொடக்க உரையை கலாந்தி சி. ஜெயசங்கர் வழங்கியிருந்தார்,

நன்றி உரைவரிவுரையாளர்சு. சந்திரகுமார் அவர்கள் கூறியிருந்தார். 4மணி நேரகால அளவு கொண்ட அலங்காரரூபன் கூத்தின் அரங்கேற்றம் எதிர்வரும் 21.07.2015ம் திகதி கிழக்குப்பல்கலைக ;கழகமைதானத்தில் நிகழ இருப்பது குறிப்பிடத்தக்கது.