அம்பாறை வைத்தியசாலையின் சைக்கிள் விழிப்புணர்வு சவாரி மட்டக்களப்பை வந்தடைந்தது

(அமிர்தகழி நிருபர்)

அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியசாலை பலதரப்பட்ட பகுதி ஊழியர்களினால்    மூன்றாவது வருடமாக மேற்கொள்ளும்  விழிப்புணர்வு  துவிச்சக்கர வண்டி சவாரி இன்று அம்பாறையிலிருந்து  கல்முனை வழியாக மட்டக்களப்பு பாசிக்குடா வரை இடம்பெற்றது .


உடல் நலத்தினை உடல் பயிற்சியின் மூலம் பேணுவோம் , இதற்கு துவிச்சக்கர வண்டி சவாரி அவசியம் என மக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் இச்செயல் திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர் .

உடல் பயிற்சி செய்வதன் ஊடாக  உடலில் ஏற்படும் தொற்றாத நோய்களான சக்கரை நோய் .இரத்த அழுத்தம் ,சிறுநீரக வியாதி ,உடல் பருமன் போன்ற நோய் தாக்கத்தினை குறைக்க முடியும் என்ற தொனியில் வருடந்தோறும் ஜூலை மாதம் இந்த விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி சவாரியினை மேற்கொண்டு வருவதாக அம்பாறை பொது வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார் .

அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி பி .கே .ஜெயசிங்க தலைமையில்  அம்பாறை வைத்தியசாலையின்  150 ஊழியர்களை கொண்ட விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி சவாரியினை மேட்கொண்டுள்ளனர்.