உறுதிமிக்க ஆட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கவும் -ரணில் மட்டக்களப்பில் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி அடிப்படை உட்கட்டமைப்பி;னை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் சந்தர்ப்பத்தினை தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தலைமையில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க,ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அமீரலி உட்பட கட்சியின் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தலைமை வேட்பாளர் அமீர்அலி,வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி,மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

இங்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

மகாவலி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு உள்வாங்கப்பட்டு அதன்மூலம் நீர்பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் நடவடிக்கையெடுக்கவுள்ளேன்.

இந்த நாட்டில் உறுதிமிக்க அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது அதற்காக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அணிதிரண்டு வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.