நாவற்குடாவில் வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியவர் கைது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.அரஸின் இல்லத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் தெரியவருவதாவது,

முட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் உள்ள மேற்பட்டி வேட்பாளரின் வீட்டின்மீது நேற்று இரவு 11.40 மணியளவில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதலுக்கு முயற்சித்துள்ளனர்.;

இதன்போது ஒருவர் வளவினுல் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்தபோது குறித்த நபர் வேட்பாளரினால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரசுரங்களை ஒட்டிக்கொண்டிருந்தவர்களே தன்வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக வேட்பாளர் அரரஸ் காத்தான்குடி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 368 வேட்பாளர்கள்.இருக்கையில் தன்னை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது தனது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதை பொறுக்கமுடியாதவர்களின் செயல் எனத்தாம் கண்டிப்பதாக வேட்பாளர் அரஸ் தெரிவித்தார்.

இச்சம்பவத்தினைபற்றி  காத்தான்குடி பொலிஸ்நிலையத்தில் தாம் முறையிட்டதாகவும் இதுகுறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் தேர்தல் வன்முறையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.