நிலை இருக்கு. இப்பொழுது இறால் சீசன். இறால் என்றால் யாருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்காது! மட்டக்களப்பில் காணப்படும் களப்புப் பகுதிகளிலே அதிகமாக இவை பிடிபடுகின்றது. மட்டக்களப்பிற்க்கு மாத்திரமல்ல இவை மிகையாகப் பிடிபடுவதனால் வேறு வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றப்படுகின்றது.
வாகரை பனிச்சங்கேணி இதற்க்கு பிரபல்யமான இடமாகும். நாங்கள் ஆற்றில் தொழில் புரியும் ஒரு பெண்ணை சந்தித்கதோம் அவர், இப்படி கூறுகிறார் '"காலையில 5 மணிக்கு ஆத்தில இறங்கினம் என்றால் மதியம் 11 மணிபோல இரண்டு மூன்று கிலோ வெள்ளை இறால் பிடித்து ஒரு ஐந்நூறு ரூபா மட்டில விக்கலாம்'' என்றார். முழு வெய்யிலிலும் காய்ந்து நீரில் தோய்ந்து கஸ்ட்டப்படும் இந்த பெண்களை விடவும், நிழலில் பார்த்திருந்து அதை கிலோ 250க்கு வேண்டி 800ரூபாவுக்கு விற்க்கும் அநியாயம் நம்மட தமிழ் மக்களை விட எந்த மக்களுக்கும் நடக்காது.
உன்மையான ஒரு சோசலிச நாட்டில் அவர்களது உழைப்பின் பலன் அவர்களை சென்றடைய வேணடும், அதற்கான வழிவகைகள் அரச அதிகாரிகளால் செய்யப்பட வேண்டும்.
'அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்' வைத்துப் பேசுகிற அரசியல்வாதிகளையும் அவர்களை உருவாக்குகின்ற முட்டாள்களையும் விட அறிவுள்ளவர்கள் இவை பற்றி ஆய்வுகளையும், அதற்கு பின் தந்திரோபாயங்களையும் வகுத்து இவர்களை மீட்டெடுக்க முன்வரவேண்டும். 'அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை' என்ற சீத்துமத்தில்தான் எமது உழைப்பாளிகள் இன்று இருக்கிறார்கள்.
நாம் இன்னும் இன்னும் பின்னுக்கு போகாமல் இந்த உலகத்தின் வளர்சியோடு ஒட்டிப்போகும் சமுகமாக எம்மினம் எப்போது மாறுதோ, அன்றுதான் நாம் சமமான வளர்ச்சியுடையவர்களாக கருதப்படுவோம். நாங்கள் செய்யவேண்டிய நற்கருமங்கள் எத்தனையோ இருந்தும் சிலர் "'ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்'" என்பதுபோல் நம் தமிழர்கள் தங்கள் மக்களின் நிலை மறந்து வாழ்க்கையைக் கழிப்பது கவலைதான்.
இவங்களுக்கும் ஒரு நாள் விமோசனம் கிடைக்காமலா போய்விடும்.
“கிழக்கிலங்கை முன்னேற்றக்கழகம்”