போதையற்ற நாட்டினை கட்டியெழுப்பும்தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
“மைத்திரி ஆட்சி - நிலையான நாடு,போதையில் இருந்து விடுபட்ட நாடு” என்னும் தொனிப்பொருளில் கடந்த 09ஆம் திகதி முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரையான ஒரு மாதகால நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் போரதீவுப்பற்று பிரதேசத்தில் போதைவஸ்து பாவனையை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளா என்.வில்வரெட்னம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.குபேரன்,போரதீவுப்பற்று பிராந்திய சுகாதார பணிப்பாளர் N.குணராஜசேகரம் மற்றும் களூஞ்சிகுடி,வெல்லாவெளி பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கிராம மட்டத்தில் போதையொழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள அதிகாரிகளுக்கு விசேட கருத்துரைகள் வழங்கப்பட்டன.
மாணவர்கள்,இளைஞர்கள்,வளர்ந்தோர் என மூன்று பிரிவுகளாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானர்களை இனம் கண்டு அவர்களை அதில் இருந்து மீட்டு எடுப்பதற்கான நடவடிக்கைகளும்மேற்கொள்ளவுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளா என்.வில்வரெட்னம் தெரிவித்தார்.
இலங்கையில் மதுபாவனையில் முதல் இடத்தினைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைவஸ்த்து பாவனையினை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் போரதீவுப்பற்றில் இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்து.