மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒப்பந்தகாரர்களின் பொதுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தகாரர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் மடத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தகாரர் சங்கத்தின் தலைவர் வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒப்பந்தகாரர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பந்த வேலைகளில் ஈடுபடுவோலை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தகாரர் சங்கம் ஒப்பந்தகாரர்களின் நலன் தொடர்பான பணியை மேற்கொண்டுவருகின்றது.

இந்த கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தகாரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவர்களின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறிப்பாக அரசாங்க ஒப்பந்தகளை பெறும்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.