பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பீப்பில் லீசிங் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் சமூக சேவைகள் பணியாக இரத்ததான நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் போரதீவுபற்றின் முன்னாள் தவிசாளரும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான வை.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக பீப்பில் லீசிங் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.சுதர்சன் தெரிவித்தார்.
பீப்பில் லீசிங் நிறுவனம் ஆறாவது ஆண்டினை பூர்த்திசெய்யும் இந்த வேளையில் முதன்முறையாக இந்த இரத்ததான முகாமினை நடாத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இரத்ததான முகாமில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.
“பொதுமக்களின் பணத்தில் வளரும் நிறுவனங்கள் பொதுமக்கள் தொடர்பில் சிந்திப்பது குறைவு.ஆனால் அதில் இருந்து விலகி பொதுமக்களுக்கு சேவையாற்ற முனையும் இவ்வாறான நிறுவனங்கள் போல் ஏனைய நிறுவனங்களும் முன்வரவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.