த(டம்)டுமாறுகிறதா? மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சைகூடம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மிக முக்கியமான உயிர்காப்பு நிலையங்களில் பிரதான இடத்தை சத்திர சிகிச்சைகூடம் பெறுகிறது.அங்கே பல மரணங்கள் தவிர்க்கப்படுகின்றன.பல பிறப்புக்கள் நிகழ்த்தப்படுகின்றன.அங்கே பலருடைய இறை வேண்டுதல்கள் மனித வடிவிலே நிறைவேற்றப்படுகின்றன.


அங்கே மத அடையாளங்கள் இல்லை.இன அடையாளங்கள் இல்லை.அங்குள்ள ஊழியர்களினால் உலக பொது மொழியாகிய ஆங்கிலமே மிக அதிகமாக பேசப்படும்.வாரமொருமுறை நுண்ணங்கி அழிப்பு நடைபெற்று எப்பொழுதும் அந்த இடம் சுத்தமாக பேணப்படும்.சத்திர சிகிச்சைகூட ஊழியர்களை தவிர வேறு எவரும் எச்சந்தர்ப்பத்திலும்  அங்கே உள்நுழைய முடியாது.ஊழியர்களுக்கென்று அங்கே விசேட ஆடைகள் உண்டு.வேறு உடைகள் அணிய முடியாது.

வைத்திய சாலையிலே இச்சிகிச்சைகூடம் மிக நீண்ட வயதை கொண்டது.பல நூறு சத்திர சிகிச்சை நிபுணர்கள் இங்கே கண்ணியமாக கடமையாற்றி சென்றுள்ளனர்.அவர்கள் யாவரும் அரசின் பொது விதிகளை நன்றாக கடைப்பிடித்தனர்.எந்தவெரு சந்தர்ப்hத்திலும் அவர்கள் தமது இனஇமத அடையாளங்களை இவ்விடங்களில் வெளிக்காட்ட முயற்சிக்கவில்லை.

ஆனால் தற்போது நிலைமை மாற்றம் பெற முயற்சிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதிக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர் தன்னுடைய விருப்பப்படி அரச பொது விதிகளை மீறி தமது இன அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை சத்திர சிகிச்சைகூடத்தினுள் அணிய முயற்சிக்கின்றார்.இதற்கு வைத்திய சாலையினுடைய நிருவாகமும் குறித்த சிகிச்சைப்பிரிவின் தலைமையும் துணைபோக முயற்சிக்கின்றமை அசாதாரணமாகும்.

வைத்தியசாலையினுடைய நடைமுறைகளை சாதாரணமாக மாற்ற முயற்சிப்பதும் இனவாதமாக்குவதும் தேசிய குற்றமாகும்.இதனைவிட சுகாதர துறைக்கேயான இன அடையாளமற்ற சேவையை வழங்காதிருப்பதும் பிழையான முன்னுதாரணமாகும்.சுகாதார துறையினர் அரசசேவகர்களாக இருக்கவேண்டுமேயன்றி மதத்தின் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது.

“பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது” எனும் நிலைக்குச் செல்ல இடமளிக்க முடியாது.சகல உணர்வுகளையும் கொண்ட தமிழர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வைத்தியசாலையினுள்ளே சில இடமாற்றம் பல நிறமாற்றம் என்பவற்றை பொறுத்துக்கொண்டோம் என்பதற்காக நாம் வாழாதிருக்கின்றோம் என எடைபோட்டுவிடமுடியாது.ஆரோக்கியமான மாற்றத்தை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வோம்.மாறாக அடையாள மாற்றத்துக்கு இடமளிக்கப்போவதில்லை.

எனவே அதிகாரிகள் மிக நிதானமாக செயற்பட்டு அசாதாரணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.