மோர்சாப்பிட்டு வை.எம்.ஏ.சி விளையாட்டுக்கழகத்தின் 87வது ஆண்டு நிறைவையொட்டு விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மாநகரத்தில் மிகவும் பழமைவாய்ந்த விளையாட்டுக் கழகங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, பயனியர் வீதி மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி. விளையாட்டுக்கழகத்தின் 87வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டது.


இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமான செ.அமிர்தலிங்கம்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேடமாக தமிழர்களின் பாரம்பரிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் விளையாட்டுப்போட்டிகளே நடாத்தப்பட்டது.

அத்துடன் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுகளும் நடாத்தப்பட்டதுடன் விநோத உடைப்போட்டிகளும் நடாத்தப்பட்டன.

தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் இப்பிரதேசத்தில் இரு இனங்களும் இணைந்ததாக இந்த விளையாட்டுக்கழகம் நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் ஒன்றுபட்டு செயற்பட்டுவருகின்றது.