கிழக்கிலங்கையின் தமிழர்களின் வரலாற்றில் அடையாளங்களாக கலை, கலாசாரம், பண்பாடுகள் முக்கியத்துவம்பெறுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்துவருவதில் பாரம்பரிய கலைகள் முக்கியத்துவம்பெறுகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தினையும் தமிழர்களின் வரலாற்றினையும் பண்பாடுகளையும் காத்துவரும் மாவட்டமாகவுள்ளது.
இந்த மாவட்டத்தின் தனித்துவ கலையாக கூத்துக்கலை இருந்துவருகின்றது. நவீனத்துவமான வகையில் இன்று கூத்துக்கலை நடாத்தப்பட்டுவந்தாலும் தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்ததாக அது நடாத்தப்பட்டுவருவது மட்டக்களப்பின் சிறப்பாகும்.
அந்தவகையில் பாரம்பரிய மணம் கமழும் வகையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்பட்டுவந்த கூத்துவிழாவில் இறுதி நிகழ்வு இன்று மாலை கோலாகலமான முறையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிச்சிறப்பு கலையின் தனித்துவத்தினை கண்டுமகிழும் வகையில் சுவிஸ் நாட்டின் இசை கலைஞர்கள் ஒன்றியத்தின் தலைவி மரியா டோரன் கலந்துகொண்டதுடன் சுவிஸ் நாட்டின் அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டி மோசன் உட்பட பலர் கலந்துகொண்டமை இந்த நிகழ்வுக்கு சிறப்பம்சமாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் மா.செல்வராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கே.ஜெயசிங்கம்,கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரி.தேவராஜா,மட்டக்களப்பு கலாசார திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த கூத்துப்பெருவிழா சனிக்கிழமை இரண்டாவது தினமாகவும் நடைபெற்றதுடன் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது.
மூன்று தினங்கள் நடைபெற்ற கூத்துவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கூத்துக்கலைஞர்கள் கலந்துகொண்டு தமது பாரம்பரிய கூத்துக்கலையினை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கூத்துக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வின் விசேடமாக சிறுவர்களுக்கு கதைகூறுவதில் சர்வதேச ரீதியில் மங்காபுழுடன் திகழும் மாஸ்டர் சிவலிங்கம் இதன்போது கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.