காத்தான்குடியில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

( லியோன் )    
                                                                                            
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காத்தான்குடி - 05  ஜாமினுல் லாசரீன் மதுசா வீதியில் அரசுக்கு சொந்தமான அரச காணியில்  கட்டிடம் கட்டுவதற்காக   அத்திவாரம் வெட்டப்பட்ட வேலைலையில் இன்று பிற்பகல்  ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் காணப்பட்டதை  அவதானித்த பணியாளர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர் .


இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற பொலிசார் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் மீட்டுள்ளதுடன் ,மீட்கப்பட்ட  துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் .