அரசடித்தீவு சக்தி இல்லத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

விசேடமாக தாய்தந்தையரை இழந்த பெண் சிறுமிகளின் உரிமையினை வலியுறுத்தும் வகையில் சிறுவர் தின நிகழ்வு இன்று காலை பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு,சக்தி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.

சிறுவர் இலத்தின் தலைவர் ச.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் உரிமைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் சர்வதேச மகளிர் தினத்தினை குறிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.