ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து சூறாவளி தேர்தல் பிரசார நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து சூறாவளி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவேண்டிய முக்கியத்துவம் தொடர்பில் பிரதியமைச்சரினால் கருத்துகள் பரிமாறப்பட்டுவருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் இளைஞர் அணியின் நீல படையணியினால் விசேட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் இணைப்பாளர் கென்டி பிரவோ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் இளைஞர் அணியின் மாவட்ட இணைப்பாளர் சுஜாந்த் ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் துண்டுபிரசுரங்களை வழங்கி இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த பணிகளில் பெருமளவான இளைஞர் யுவதிகள் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.