நாய்களுக்கான இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி வேலூர் கிராமசேவகர் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை சமூக சுகாதார நலன் கருதி கட்டாகாலி நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கான இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றது.


இந்நிகழ்வானது இன்று காலை 9மணி முதல்  கல்லடி வேலூர் கிராமசேவகர் காரியாலயத்தில் இப்பகுதியின் கிராமசேவகர் ரி.சிவலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன்  சுகாதார சேவைகள் திணைக்களத்தினால்,பொதுச்சுகாதார உத்தியோகத்தரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இன்றைய நாளில் பெரும் எண்ணிக்கையான நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.