மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் இராணுவம் சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியினை துப்புரவுசெய்யும் பணியை இன்று திங்கட்கிழமை காலை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.


கிழக்குமாகான   231வது பாதுகாப்பு கட்டளை தலைமை அலுவலக அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு 12வது பாதுகாப்பு படை கஜபா படைப்பிரிவின்  தலைமை அதிகாரி தலைமையிலான ராணுவ அணியுடன்  மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் தலைமையிலான ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து  ஆலய தீர்த்த குளத்தினை சுத்தம் செய்யும் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இதன் போது  குளத்தினுள் காணப்பட்ட அனைத்தும்  பாசிகளும் அகட்டப்பட்டன . குளத்தினை சுத்தம் செய்யும் போது  முதலை குட்டி ஒன்றும் பிடிக்கப்பட்டதுடன் முதலை முட்டை இடும் இடமும்  கண்டுபிடிக்கப்பட்டது .