கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது போரதீவுப்பற்றில் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்தவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 13000 குடும்பங்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டதாகவும் ஏனையவர்களுக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.