மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்கீழ் பட்டிப்பளை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான படுக்கை விரிப்புகள் மற்றும் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எட்டு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1200 குடும்பங்களுக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஆறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 800குடும்பங்களுக்கான பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாகச்சென்று இந்த பொருட்களை வழங்கிவைத்தார்.
இதன்போது முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.
அத்துடன் முகாம்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொடுக்கவும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் பிரதியமைச்சர் மேற்கொண்டார்.