காலை 9மணிக்கு கணபதி ஹோமம், 10மணிக்கு அபிஷேகப் பூசை, 11.00 மணிக்கு பஜனை, 12 மணிக்கு ஐயப்பனின் மண்டலப் பூசை என்பன நடைபெற்றன.
கடந்த 09 வருடமாக இந்த மணிகண்ட மண்டலப் பெருவிழாவினை மட்டக்களப்பு மாவட்ட ஹரிகரசுதன் மணிகண்ட பாதயாத்திரைக்குழுவினர் நடாத்திவருகின்றனர்.
இதன்போது கொழும்பு மற்றும் பல பாகங்களிலும் இருந்தும் பெருமளவான சுவாமிமார்கள் மற்றும் அடியார்கள் கலந்துகொண்டனர்.