அருட்தந்தை கெரிஸ்டன் வின்சன்ட் குருவாக திரு நிலைப்படுத்தபட்டார்

மட்டக்களப்பு சகாயபுரம் -புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை  கெரிஸ்டன் வின்சன்ட் தமது  குருத்துவ  பணி வாழ்வினை தேர்ந்தெடுத்து மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் தலைமையில் குருவாக திரு நிலைப்படுத்தபட்டார்.


அருட்தந்தை  கெரிஸ்டன் வின்சன்ட்  அவர்கள் கூழாவடி புதுமைப்புரத்தை சேர்ந்த வெஸ்லி வின்சன்ட்   தம்பதிகளின்  புதல்வர்  ஆவார் . தமது  பாடசாலைக் கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை பெற்றுக்  கொண்டார்.  

ஆன்மீகம் பற்றிய  பயிற்சி  நெறிகளை மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்தில்  16.01.2005  ஆண்டில் பெற்று , 22.10.2006 ஆம் ஆண்டு களுத்துறை இடை நிலை குருமடத்திலும் நிறைவு  செய்தார்.

குருத்துவ  நிலைக்கான  மெய்யியல்  21.09.2007 ஆண்டு மற்றும் 21.09.2010 ஆண்டு இறையியல்  கற்கை  நெறிகளை  இலங்கை மாதா பெரிய தேசிய குருமடம்  கண்டி அம்பிட்டியவில்  நிறைவு செய்தார். 2014.10.19 ஆம்  திகதி    "தியாக்கோனாக " உயர்த்தப்பட்டார்.  

குருவாக  திருநிலைப்படுத்தப்பட்டு அருட்தந்தை தனது முதல் திருப்பலியை  தனது பிறப்பிடமான புதுமைப்புற பங்கில் 2014.12.14ஆம்திகதி  ஞாயிற்றுக் கிழமை  விசேட  திருப்பலியுடன்  சிறப்பாக  தமது  பங்கு  மக்களுடன் ஒப்புக்கொடுத்தார்.   தனது இரண்டாவது திருப்பலியை சகாயபுர பங்கில் 21.12.2014  ஞாயிற்றுக் கிழமை அருட்தந்தையின் பெற்றோருடன் மிக சிறப்பாக கௌரவிக்கப்பட்டு  பங்கு மக்களுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .