சித்தாண்டி,3ஆம் வட்டாரத்தினை சேர்ந்த செல்லத்தம்பி விநாயகமூர்த்தி(79வயது)என்பவரே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதில் சித்தாண்டி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர்.
உயிரிழந்தவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட குளிர் காரணமாகவே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.