நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு வலயத்திலுள்ள நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை நிறுவப்பட்டு 52 வருடங்களின் பின்னர் 2014 இல் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரீட்சையில் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


வித்தியாலய முதல்வர் அருள்திரு. வேதநாயகம் சிறிபாலராஜ் அவர்களின் நெறியாள்கையில்  கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.ரீ.ஏ. நிசாம் அவர்கள் பிரதம அதிதியாகவும் மு.பவளகாந்தன் (தொழினுட்ப ஆலோசகர்),இரா. நெடுஞ்செழியன் (மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் - மட்டக்களப்பு மாவட்ட செயலகம்), க. பாஸ்கரன் (வலயக் கல்விப் பணிப்பாளர்- மட்டக்களப்பு,.கே. சத்தியநாதன் (மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்), அ. சுகுமாரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர்),  மதிப்புமிகு அதிதிகளாக.கே. டேவிட் (ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்), திருமதி.எம். சுந்தரமூர்த்தி (ஓய்வுநிலை சேவைக்கால ஆலோசகர்), திரு.எஸ்.மோகனசுந்தரம் (அதிபர், கண்டலடி பாடசாலை,  மேன்மைமிகு அதிதிகளாக திருமதி.ஜ.இந்திரகுமாரன் (சேவைக்கால ஆலோசகர்-ஆரம்பக்கல்வி), மற்றும் பாடசாலையினைச்செதுக்கும் சிற்பிகளாக சிவஸ்ரீ.எம்.சந்திரசுதாகர், (பிரதம பூசகர் -நாவற்கேணி ஸ்ரீகண்ணகியம்மன் தேவஸ்தானம்), ரீ. நாகரெத்தினம் (ஊர்ப் பிரமுகர்), திருமதி.சீ.பிரதீப் (கிராம சேவை அதிகாரி), எஸ். மோகன்ராஜ் (ஆசிரியர் - வேப்பவெட்டவான்,பாடசாலை, எந்திரி. கே. கோகுலரஞ்சன் (ஓய்வுநிலை பொறியியலாளர், ரெலிகொம், மற்றும் ரீ. சத்தியசீலன் (தலைவர்-சிவில் கண்காணிப்பு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய கே.டேவிட் அவர்கள் பாடசாலையின் பின்னணியினையும் 2011.08.03இல் பதவியேற்ற புதிய அதிபரின் அணுகுமுறையும், அவரது மும்மொழித் தேர்ச்சியும் குறித்து சிலாகித்து இதன் விளைவாகவே இம் மாபெரும் வெற்றியினைப் பெற முடிந்தது என உரைத்தார்.

மு. பவளகாந்தன் தனது உரையில், தேர்ச்சிகளை மையமாகக் கொண்டு கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை இப் பாடசாலை முன்னெடுத்ததினாலேயே இவ் வெற்றியினைப் பெற முடிந்தது எனக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தமதுரையில், புதிய அதிபர், ஆசிரியர்கள், வளவாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியின் விளைவாக இவ் வெற்றி பெறப்பட்டுள்ளதை தாம் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

அதிபர் தமது கருத்துக்களை முன் வைக்கும் போது, இப் பாடசாலையின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது முழுக்க, முழுக்க ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளும், வளவாளரான திருமதி. எம்.சுந்தரமூர்த்தி அம்மா அவர்களின் முழுமையான இலவச கற்றல் - கற்பித்தல்களும், தமது இரவு நேர இல்லச் சந்திப்புகளும், இரவு நேரக் கற்கைகளும், 162 புள்ளிகளைப் பெற்ற செல்வன். புவவனேஸ்வரன் மிருசனன் மாணவனின் பெற்றோரின் அனுசரணையும், ஆர்வமும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் காத்திரமான பங்கேற்புகளும், பாடசாலை மேம்பாட்டுநர் திருமதி. ஜ. இந்திரகுமாரன் அவர்களின் ஈடுபாடுகளுமே காரணமாகும் எனத் தெரிவித்து ஆசிரியர்களை அறிமுகப் படுத்தினார்.

நிறைவாக மாணவர்கள், புலமைப்பரிசில் ஆசிரியை திருமதி. பிரேமாவதி. இராஜரெத்தினம், அதிபர் ஆகியோர்கள் முறையே வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர்களாலும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் ஏனைய அதிதிகளாலும், குறிப்பாகவெற்றிக் கிண்ணத்தினை  மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்இரா. நெடுஞ்செழியன் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.

முடிவாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தமது உரையில்,

ஆசிரியை திருமதி. அ. சுபாஸ் நெறிப்படுத்தப்பட்ட மாணவர்களின் அபிநயத்தினைச் சிலாகித்து உடனடியாகவே பாடசாலை மண்டபத்தில் ஓர் மேடையினை உருவாக்க வலயக் கல்விப் பணிப்பாளர் நடவடிக்கையினை எடுக்க வேண்டுமெனவும், அதிபர் மிகச் சிறப்பாக ஆசிரியர்களைக் கண்ணியப்படுத்தும் பண்பை மெச்சியும், கிழக்கு மாகாணப் பாடசாலைகள் இப் பாடசாலையினைத் தரிசிக்கத் தான ஆவன செய்வதாகவும், கிழக்கு மாகாணத்திலுள்ள செயலமர்வுகளில் அதிபர் கலந்து கொண்டு தமது அனுபவப் பகிர்வுகளை பதிவு செய்யத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மாணவர்களைப் பாராட்டி வாழ்த்த நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவெய்தியது.