கா.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேறு வெளியாகியது –வர்த்தக பிரிவில் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவி சாதனை

வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் வர்த்தகப்பிரிவில் மட்டக்களப்பு கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவி சிவலிங்கம் நேரூஜா வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

சற்றுமுன்னர் வெளியாகிய பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.

இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவி மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று மாவட்டத்துக்கு பெருமைசேர்த்துள்ளார்.