கல்லடி,உப்போடை இராமகிருஸ்ண மிஸனின் சாரதா முன்பள்ளியின் 2014 ஆண்டு மாணவர்கள் வெளியேறிச்செல்லும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை இராமகிருஸ்ண மிஸனின் சாரதா முன்பள்ளியில் 2014ஆம் ஆண்டு கற்ற முன்பள்ளி  மாணவர்கள் வெளியேறிச்செல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி இந்திராணி புஸ்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ண மி~னின் பொறுப்பாளர் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் கலந்துகொண்டார்.

இதன்போது வெளியேறிச்செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் அழகிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.