அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் இந்த விளக்கமளிக்கும் செயலமர்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலிசாகிர் மௌலானா, மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், திணைக்ளத் தலைவர்; கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, சுத்தமான குடிநீரின் முக்கியத்துவம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய் குடிநீர் வழங்கலின் தன்மைகள். ஆதற்கான தேவைகள், செலவு, வருடாந்த செலவு மீதப்படுத்தல், நீர்ப்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிரிவு முகாமையாளர் பொறியியலாளர் கே.பி.வினோதன், அம்பாறையைச் சேர்ந்த பிரதம பொறியியலாளர் பொறியியலாளர் ஆதம் வாவா, பொறியியலாளர் எம்.எல்.எம்.ஹலால்தீன், கல்லாறு நீர்வழங்கல் பிரிவு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அருளம்பலம் உள்ளிட்டோர் விளக்கங்களை வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிரிவு முகாமையாளர் பொறியியலாளர் கே.பி.வினோதன்,
சமூர்த்தி பயனாளிகள் குடிநீர் விநியோகத்தை குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும், பாடசாலைகளுக்கு இணைப்புச் செலவு மாத்திரமே அறவிடப்படும் மாதாந்தக் கொடுப்பனவு திறைசேர்மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான விடயங்கள் தெரியாமையினால் பாடசாலைகள் இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்குகின்றன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் விநியோகத்தினைப் பெற்றுக் கொள்பவர்கள் தங்களது குடிநீருக்காக மாத்திரம் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் எமது நீர் விநியோகத்தினை முழுமையாகப் பாவிப்பதனால் மாதாந்த மின்சாரக்கட்டணம் ஒரு குறிப்பிட்டளவான அளவில் குறைக்கமுடியும்.
குடிநீர்ப்பாவனை, எமது கட்டணம், பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பாவனை தொடர்பிலி; சரியான விளக்கமில்லாமையினாலேயே பலர் பாவனையைக் குறைத்துக் கொள்வதும், இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளாமலும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.