வவுணதீவுப்பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு - இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் வயல் பகுதியில் கஞ்சா தோட்டங்கள் செய்துவந்த இருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 66 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதாகவும் வயல் பகுதியிலேயே இவை நடப்பட்டிருந்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னங்குடாவில் உள்ள வயல்வெளியில் இருந்தே இந்த கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கன்னங்குடாவை சேர்ந்த சின்னத்தம்பி வைரமுத்து என்பவரின் தோட்டத்தில் இருந்து 47 கஞ்சா செடிகளும் கந்தையா சித்திரவேல் என்பவரின் தோட்டத்தில் இருந்து 19 செடிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிவான நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் இருவரையும் எதிர்வரும் தை மாதமட 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.