மட்டக்களப்பில் பகலிலும் எரியும் மின் விளக்குகள்

மட்டக்களப்பு மாநகரசபையினால் பராமரிக்கப்படும் வீதி விளக்குகள் உரிய நேரத்தில் அணைக்கப்படாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது.


பகல்வேளைகளில் கூட இந்த வீதி மின்விளக்குகள் எரிவதை காணமுடிகின்றது.குறிப்பாக இருதயபுரம்,மாமாங்கம் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இவ்வாறு பகல் வேளைகளில் எரிந்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது.

இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் சில நாட்கள் சரியான முறையில் அணைக்கப்பட்டுவந்த நிலையில் மீண்டும் இவ்வாறு பகல் வேளைகளில் ஒளிர்வதை காணமுடிகின்றது.

குறித்த பகுதியில் மின் விளக்குகளை ஒளிரச்செய்வதற்கும் அணைப்பதற்கும் ஒருவர் கடமையாற்றிவரும் நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு ஆணையாளர் கவனம் செலுத்தவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.