மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் மனோகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக பேராசிரியர் மௌனகுரு கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்பாளர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் மிகவும் பிரசித்திபெற்ற பாடசாலையான பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் வளர்ச்சிக்கு சேவையாற்றிய அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களும் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.





















