(தவக்குமார்)
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் 89வது அவதார தின விழா தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மண்டூர் சத்திய சாயி பிரார்த்தனை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிகாலை 4.30 மணியளவில் நகர சங்கீர்த்தனத்துடன் ஆரம்பமானது.
பின்னர் அதனைத் தொடந்து 23ம் திகதி அதிகாலை 4.45 மணிக்கு ஓங்கார சுப்ர பாதம் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்கள் ப+மியில் திரு அவதாரம் செய்த நேரமான அதிகாலை 5மணி 06 நிமிடத்தில் விசேட ஆராதனை நடைபெற்றது.
அன்றைய திகம் நிலையத் தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் அவர்களினால் பிராசாந்தி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பி.ப 3.00 மணியளவில் பஜன் ஆரம்பமானது பகவான் சாயியின் திருவ+ஞ்சல் நிகழ்வும் சிறப்பாக அமைந்தது.
சாயி பாபா அவர்களின் 89வது அவதார தின விழாவினையொட்டி வெல்லாவெளி விவேகானந்தபுரக்கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அன்றைய நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக நிலையத் தலைவர் மற்றும் டாக்டர்.ந.பிறேமதாசன்(ஸ்ரீ சத்தியசாயி மத்திய அறக்கட்டளை உறுப்பினர்-இலங்கை ஆகியோர் ஆன்மிக் சிறப்புரையாற்றினர். அத்தோடு முன்னாள் நிலையத் தலைவர் என்.லெஸ்லி நிகால் அவர்களால் “சாயிநாம மகிமை” என்ற தலைப்பில் கவிதை பாடப்பட்டது.
இந் நிகழ்வில் கிராம பிரமுகர்கள் ஆன்மீக நிலைய அங்கத்தவர்கள் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர் பி.ப 6.00 அளவில் பிராசாந்தி கொடி இறக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.