மட்டக்களப்பு செலான் வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் பட்டத் திருவிழா ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடிக் கடற்கரையில் நடைபெற்றது.
மட்டக்களப்புக் கிளையின் உதவி முகாமையாளர் ஜோசப் ஜயமேனன் தலைமையில் இந்தப் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் செலான் வங்கிதலைமைக்கிளையின் வியாபாரப்பகுதி உத்தியோகத்தர் ரி.பிரியந்தன், கல்முனைக்கிளை முகாமையாளர் திருமதி பிரேமினி மேகராஜ், மட்டக்களப்பு வங்கி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பட்டத் திருவிழாவில் செலான் வங்கியில் சிறுவர் கணக்குகளைப் பேணும் நூற்றுக்கணககான சிறுவர்கள் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.