இன்று காலை 11.00மணியளவில் இலுப்படிச்சேனை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கன்னங்குடாவை சேர்ந்த எஸ்.தனஞ்செயன்(32வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
சந்தியில் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தபோது மண்னேற்றிக்கொண்டுவந்த கன்டர் வாகனம் அவர் மீது மோதியுள்ளது.
இதன்போது அவர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களில் வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.