மத்தியகிழக்கு நாடொன்றிக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற தாயார் மீண்டும் வீடு வந்து சேராதமையினையிட்டு மனக்கவலை அடைந்த மகன் மண்ணென்னை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த மயில்வாகனம் இராமச்சந்திரன் வயது (14)என்ற சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டுப்பணிப்பெண்;ணாக சவுதியரேபியா மத்தியகிழக்கு நாட்டிற்கு சென்ற தாயாரை வீட்டிற்கு மீண்டும் வருமாறு தொலை பேசியூடாக தொடர்பு கொள்ளும் போது கேட்டுள்ளார். தாயாரும் வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இன்று வருவார் நாளை வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்து மணமுடைந்த மகன் நேற்று வியாழக்கிழமை மாலை வீட்டு பாவனைக்காக வைத்திருந்த மண்ணென்னையினை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
தற்போது குறித்த சிறுவன் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்பு தேடிச் செல்வோர்கள் தங்களது பிள்ளைகளின் வயது வேறுபாடு அவர்களது உளநலம் மற்றும் குடும்ப பின்னனிகள் பிள்ளைகளின் பாதுகபப்பு என பல்வேறுபட்ட விடயங்களில் கவனம் செலுத்தும்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.